about Tamil Department

07.05.2012ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியின் தமிழ்த்துறையில் நான்கு பருவங்களுக்குரிய மொழிப்பாடம் இளங்கலை மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

தொடக்கத்தில் நான்கு தமிழாசிரியர்களைக் கொண்டுச் செயல்பட்டு வந்த இத்துறையில், இன்று நீண்ட காலம் பணி அனுபவம் பெற்ற 9 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முனைவர் பட்டம் பெற்ற இரண்டு பேராசிரியர்களும், தகுதித் தேர்வில் (NET, TNSET) தேர்ச்சிப் பெற்ற மூன்று பேராசிரியர்களும், ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற நான்கு பேராசிரியர்களும் என ஒன்பது பேராசிரியர்கள் பணியாற்றி வருவது சிறப்பு. இப்பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றதுடன் அமையாது, வரலாறு, இதழியல், மொழியியல், கல்வியியல் போன்ற பிறத் துறைகளில் பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்துள்ளனர்.

2015ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறை சார்பில் “காலந்தோறும் தமிழ் இலக்கியப் போக்குகள் ” என்னும் பொருண்மையிலான தேசியக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு இக்கருத்தரங்கில் ஆய்வாளர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் நூலாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்றுவிக்கும் பாடங்கள்

தொல்காப்பியம் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புறவியல் கோட்பாடுகள், காப்பியங்கள், , மனித உரிமைகள், திறனாய்வுக் கோட்பாடுகள், ஒப்பிலக்கியம் முதலிய பாடங்கள் இளங்கலை தமிழ் மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கற்றுத் தரப்படுகிறது.

பயிற்றுவிக்கும் முறை

வகுப்பறையில் மாணவர்களின் சுய சிந்தனையைத் தூண்டும் வகையில் கற்பித்தல்.
மாணவர் கருத்தரங்குகள், ஆசிரியர் கருத்தரங்குகள் மற்றும் வகுப்பறை விவாதங்களை நிகழ்த்துதல்.
நவீனத் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டு பாடங்களைத் தெளிவுப்படுத்துதல்.

தமிழ் மன்றம்

வாயிலாக முதுகலைத் தமிழ்ப்பாடம் பயிலும் மாணவர்களுக்கும், மொழிப்பாடம் பயிலும் மாணவர்களுக்கும், சிறப்புச் சொற்பொழிவாளர்களை அழைத்து வந்து சொற்பொழிவாற்றுதல் வாயிலாக மாணவர்கள் பரந்த அறிவினைப் பெறுகின்றனர். மாணவர்களுக்குக் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மிகச்சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் விழா நடத்தப்படுவதோடு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.